நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். அப்போது, காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்ளவுள்ளார். மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவித்தல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவை முன்னிட்டு, அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றுதல், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பது உள்ளிட்ட ஒத்திகைகள் நடைபெற்றன.