நீலகிரி : கோடை சீசனுக்காக உதகை கேர்ன்ஹில் வனப்பகுதியில் வனத்துறையினரின் சார்பில் அமைக்கப்பட்ட பொருள் விளக்க மையம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதிகளில் சூழல் சுற்றுலா என்ற பெயரில் வனப்பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், வனத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, உதகை கேர்ன்ஹில் வனப்பகுதியில் தொங்கு பாலம், வனவிலங்குகளான சிறுத்தை, புலி, மான், கரடி, நாக பாம்பு, மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழும் வரையாடுகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக தத்ரூபமாக செய்து வைக்கப்ட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய விளம்பரம் இல்லாததால், சுற்றுலாப் பயணிகளின் வருகை கேர்ன்ஹில் வனப்பகுதியில் குறைவாகவே உள்ளது. இதனால், இங்கு வைக்கப்பட்டுள்ள வனவிலங்குகளின் மாதிரி உருவங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்த நிலையில் காட்சியளித்தது. மேலும், வனப்பகுதி நடுவே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் கம்பிகள் மற்றும் பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள பலகைகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால், இங்கு வரும் ஒரு சில சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருந்தது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனின் போது வரும் சுற்றுலாப் பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வன விலங்குகள் குறித்து பயிலும் மாணவர்களுக்காகப் பொருள் விளக்க மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், சிதலமைடந்து காணப்பட்ட கரடி, மான், புலி, சிறுத்தை, கருங்குரங்கு, வரையாடு போன்ற வனவிலங்குகளின் மாதிரி உருவங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன மேலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் தொங்கு பாலம் சீரமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் நடந்து செல்ல திறக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை பறவை இனங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்காக, பல்வேறு வகை பறவை இனங்கள் குறித்து விளக்கப்படக் கண்காட்சியும், மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தோடர், கோத்தர் இன மக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்கள் பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்த விளக்க உருவங்கள் மற்றும் பொருட்கள் இந்த பொருட்கள் விளக்க மையத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.