கோவையில் உள்ள இந்திய ராணுவ விமானப்படை தளத்தை படம்பிடித்த வடமாநிலத்தவர் கைது

கோவை : சூலூர் அருகே உள்ள இந்திய ராணுவ விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்த வடமாநில இளைஞரை சூலூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கோவை : சூலூர் அருகே உள்ள இந்திய ராணுவ விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்த வடமாநில இளைஞரை சூலூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சூலூரில் இந்திய ராணுவ விமானப்படை தளம் உள்ளது. இங்கு புதிய ரக விமானம் மற்றும் விமானம் பழுது நீக்கும் தளம், விமான பயிற்சி தளம் ஆகியவை உள்ளன. பாதுகாப்புமிக்க பகுதியான இங்கு வீடியோ, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சூலூர் கலங்கல் பகுதியில் இருந்து விமானப்படை வளாகத்தில் உள்ள விமான ஓடுதள பாதையை நேற்று முன்தினம் ஒரு இளைஞர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

இதை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த விமானப்படை வீரர்கள் சம்பந்தப்பட்ட இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். மேலும், அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிபட்ட இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்னோயல் (21) என்பவர் எனத் தெரிய வந்தது. பிடிபட்ட இளைஞரை விமானப்படை வீரர்கள், சூலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சூலூர் போலீஸார் அந்த இளைஞரிடம் எதற்காகப் புகைப்படம் எடுத்தார் என்றும், அவரின் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...