கோவையில் 4-வது நாளாக ஜாக்டோ ஜியோ போராட்டம் : ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊர்வலமாகச் சென்று மறியல்

கோவை : பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



புதிய ஓய்வூதிய திட்டமான சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பள்ளி கல்வி துறையையும் தொடக்கக் கல்வி துறையும் இணைக்கக் கூடாது மற்றும் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்குப் பணியிட மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி விடுதலையான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 4வது நாளாக இன்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவையில் சாந்தி திரையரங்கு முன்பு இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டம் காரணமாக ஏராளமான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

கடந்த 3 நாட்களாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மட்டும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கல்வித்துறை அமைச்சு பணியாளர் சங்கம், காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கம், தலைமை செயலக ஊழியர்கள் உள்ளிட்ட சங்கத்தினரும் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...