பல போராட்டங்களுக்குப் பிறகு லாரியில் ஏற்றப்பட்டது சின்னத்தம்பி யானை : இரண்டு தந்தங்களும் உடைந்த பரிதாபம்

கோவை : தடாகம் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மற்றொரு காட்டு யானையான சின்னத்தம்பி, பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு லாரியில் ஏற்பட்டது.


கோவை : தடாகம் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மற்றொரு காட்டு யானையான சின்னத்தம்பி, பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு லாரியில் ஏற்பட்டது. 

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது.  இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, கும்கி யானைகளான விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகியவற்றின் உதவியதால் பிடிக்கப்பட்டது. பின்னர், வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. 

இந்த நிலையில், மற்றொரு காட்டு யானையான சின்னதம்பியை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். குட்டி உள்பட 2 யானைகளுடன் சுற்றித் திரியும் சின்னத்தம்பியை, வனத்துறையினரின் மூன்று மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, தனியாகப் பிரிக்கப்பட்டது. இருப்பினும், பிற யானைகள் உடன் இருப்பதால், சின்னத்தம்பியை லாரியில் ஏற்றுவது அரிதான காரியம் என்பதை வனத்துறையினர் உணர்ந்தனர். 

இதைத் தொடர்ந்து, மூன்று முறை மயக்க ஊசியில் மருந்து செலுத்தப்பட்ட சின்னத்தம்பி, ஓரிடத்தில் நிற்க முடியாமல் நடந்து கொண்டே இருந்தது. விநாயகன் யானையை லாரியில் ஏற்றியதைப் போன்றே, சின்னத்தம்பியின் கால்களிலும் கயிறு கட்டி மரத்தில் கட்டப்பட்டது. பின்னர், சின்னத்தம்பியின் மீது வனத்துறை ஊழியர் ஒருவர் ஏறி, ரேடியோ காலரைப் பொருத்தினார். இதைத் தொடர்ந்து, கலீம், விஜய் ஆகிய கும்கி யானைகளின் உதவியால் அடுத்தகட்டமாக, லாரியில் ஏற்றப்பட்டது. அப்போது, சின்னத்தம்பியின் இருதந்தங்களும் உடைந்தன. இது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், வனஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



தற்போது, லாரியில் ஏற்றப்பட்டுள்ள சின்னத்தம்பி, இன்று மாலைக்குள் வேறு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது தொடர்பான செய்திகளை படிக்க




மயக்க ஊசி செலுத்தப்பட்ட சின்னதம்பியை லாரியில் ஏற்றும் முயற்சியில் கும்கிகள்

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...