முகாம் முடியும் முன்பே பிரியாவிடை பெற்ற புதுச்சேரி பிரக்ருதி யானை

கோவை : கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, முகாம் முடியும் முன்பே புதுச்சேரி பிரக்ருதி யானை, மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் இருந்து பிரியாவிடை பெற்றது.

கோவை : கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, முகாம் முடியும் முன்பே புதுச்சேரி பிரக்ருதி யானை, மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் இருந்து பிரியாவிடை பெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 30-ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் தமிழகத்தில் இருந்து 26 யானைகள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 2 யானைகள் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இதில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளார் சனீஸ்வரர் கோவில் யானை பிரக்ருதி (என்னும்) பிரணாம்பிகை என்ற யானையும் ஒன்று. 



இந்த நிலையில் வரும் 28-ம் தேதி திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் மஹாகும்பாபிஷேக திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு அனுமதியின் பேரில் பிரக்ருதி யானை நேற்று மாலை மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டது. லாரி மூலம் ஏற்றப்பட்ட யானை, முகாம் முடிய இன்னும் 6 நாட்கள் மீதமுள்ள நிலையில், திருநள்ளாருக்கு அழைத்து செல்லப்பட்டது. கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் அக்கோவிலின் யானைகளின் பங்களிப்பும் யானைகளைக் கொண்டு நடத்தப்படும் கஜபூஜையும் இன்றியமையாதது என்பதால் பிரக்ருதி யானை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முகாம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் முகாமில் தனது யானை 42 நாட்கள் பங்கேற்று இயற்கை எழில் மிகுந்த பகுதியில் பிற யானைகளோடு கூட்டமாக தங்கி சத்தான உணவு, நடைப்பயிற்சி, தரமான மருத்துவ கண்காணிப்பு, ஆற்று நீர் குளியல் மற்றும் பூரண ஓய்வு என யானை புத்துணர்வுடன் உள்ளதாக, அதன் பாகன் மகிழ்ச்சியுடன் முகாம் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். முகாமை விட்டு வெளியேறிய யானை பிரக்ருதியை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முகாம் ஊழியர்கள் வழியனுப்பி வைத்தனர். யானையும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தனது துதிக்கையினை தூக்கி வணக்கம் வைத்தது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...