கோவை : கணுவாய் - தடாகம் சாலையில் செங்கல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை தடாகம் பகுதியில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி, வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று தடாகம் பகுதியிலுள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்யும் தஞ்சாவூரைச் சேர்ந்த மாதவன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதிஸ்குமார் ஆகியோர் இருசக்கர வாகன லோன் பணம் கட்டுவதற்காக, கணுவாய் பகுதியிலுள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க டூவிலரில் சென்றனர். இதில், இருசக்கர வாகனத்தை சதிஸ்குமார் ஓட்டியுள்ளார்.

கணுவாய் சோமையனூர் மெயின்ரோட்டில் உள்ள நர்சரி அருகே முன்னாள் சென்று கொண்டு இருந்த லாரியை முந்த முயன்றுள்ளதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதியதில், லாரி சக்கரங்கள் ஏறியதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்ததும் தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, லாரியை ஓட்டிவந்த டிரைவர் தப்பி ஓடியதால், லாரியை மட்டும் போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவதால், விபத்தைக் கட்டுப்படுத்த சாலை விரிவாக்கம் செய்து பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.