கோவை : தடாகம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மற்றொரு காட்டு யானையான சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, கும்கி யானைகளான விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகியவற்றின் உதவியதால் பிடிக்கப்பட்டது. பின்னர், வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

இந்த நிலையில், மற்றொரு காட்டு யானையான சின்னதம்பியை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குட்டி உள்பட 2 யானைகளுடன் சுற்றித் திரியும் சின்னத்தம்பியை, மூன்று மணி நேரமாகப் போராடி தனியாகப் பிரிக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். இருப்பினும், பிற யானைகள் உடன் இருப்பதால், சின்னத்தம்பியை லாரியில் ஏற்றுவது அரிதான காரியமாக உள்ளது. சின்னத்தம்பியை பிடிக்கும் பணியில், கலீம், முதுமலை உள்பட 4 யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது, மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பியை பிடிக்கும் முயற்சியை தொடங்கியுள்ள வனத்துறையினர், அதனை டாப்சிலிப் பகுதியில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.