கோவையை பசுமையாக மாற்ற நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் : கோவையில் இந்தியாவின் வனமகன் வலியுறுத்தல்

கோவை : மெல்ல மெல்ல பசுமையை இழந்து வரும் கோவை மாவட்டம், மீண்டும் பசுமை மிகுந்த சோலையாகத் திரும்ப வேண்டுமெனில், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என இந்தியாவின் வனமகன் ஜாதவ் மொலய் பயேங் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : மெல்ல மெல்ல பசுமையை இழந்து வரும் கோவை மாவட்டம், மீண்டும் பசுமை மிகுந்த சோலையாகத் திரும்ப வேண்டுமெனில், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என இந்தியாவின் வனமகன் ஜாதவ் மொலய் பயேங் வலியுறுத்தியுள்ளார். 



தொழில்நகரமான கோவையைச் சுற்றிலும் பெரும்பாலும் வனங்களே நிறைந்துள்ளன. ஆனால், நாளுக்குநாள் கோவை மாவட்டம் பசுமையை இழந்து வருவது வன ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி வந்தது. இதனால், நகர்ப்புறங்களிலும் வனப்பகுதியை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக, கோவை சிங்காநல்லூர் குளப்பகுதியில், மியாவாக்கி முறையில் நகர்ப்புற வனத்திட்டத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை இந்தியாவின் வனமகன் ஜாதேவ் பயேங் தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதன்படி, சிங்காநல்லூர் குளப்பகுதியில் 'ஜாதவ ஆரண்யா' என்ற வனத்தை உருவாக்கும் திட்டத்தை ஜாதேவ் பயேங் இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தின் உறுப்பினர்கள், கோவை மாநகராட்சி நிர்வாகம், இந்திய ஆயில் நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டனர்.



பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "மரங்கள் வளர்வதற்கு குளங்கள் மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றன. குளங்கள் மற்றும் குளத்தையொட்டியுள்ள பகுதியில் வாழும் பல்லுயிரினங்கள் வாழ்வதற்கு மரங்கள் உதவுகின்றன. அப்பகுதியை பசுமையாகவும், தூய்மையாகவும் வைக்க பல்லுயிரினங்கள் முக்கிய பங்காற்றுகின்றன," என்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது, மணல் படுகையையும் வனமாக மாற்றிய இந்தியாவின் வனமகன் ஜாதேவ் பயேங்கிற்கு டாக்டர். ரவிசங்கர் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 



அப்போது, அவர் பேசியதாவது :- இது மாணவர்களுக்கு ஒரு செயல்விளக்கப் படமாக அமையும். ஒவ்வொரு மாணவனும், மரத்தை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும். இதுபோன்று அனைவரும் செயல்படும் போது, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் பசுமையானதாக மாறிவிடும். மக்கள் உங்களை தடுத்து நிறுத்துவதற்காக, ஊக்கத்தைக் கெடுப்பார்கள். ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து உங்களது சிறந்தப் பணியினை மேற்கொள்ள வேண்டும். நாளடைவில், உங்களது சிறிய நடவடிக்கையும் சிறப்பானதாக இருக்கும், எனக் கூறினார். 



முன்னதாகக் சிங்காநல்லூர் குளக் கரையில் மரக்கன்றுகளை நடவு செய்த அவர், இயற்கை மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து, மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, 36 ஆண்டுகளாக அஸ்ஸாம் மாநிலத்தில் மணல் படுகைகள் உள்பட 1,360 ஏக்கர் நிலங்களை பசுமை காடுகளாக மாற்றிய நிகழ்வுகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். 

இதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன், குப்பைகள் மற்றும் பாட்டில்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சிங்காநல்லூர் குளம் கடந்து வந்த பாதையை விளக்கினார். அப்போது, அவருக்கு 'கிரீன் இனிடியேடிவ் விருது வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் மூத்த விஞ்ஞானி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் மனாஷ் ரவுத்ரி, ராபர்ட் போஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பி. மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை பாதுகாப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...