கோவை : பொது இடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டிருந்தாலும், உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்டெடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பொதுநல வழக்கில், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், அரசு நிலங்கள், நடைபாதைகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளனவா..? என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சித்துறைக்கு அறிவுறுத்தியது.
அதன்பேரில், கடந்த 8-ம் தேதி மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு கடிதம் எழுதியதாக நீதிமன்றத்தில் பதிலளித்த உள்ளாட்சித்துறை, 125 நகராட்சிகள், 12 மாநகராட்சிகள், 528 டவுன் பஞ்சாயத்துக்களில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களின் முழு விபரங்களையும் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியது.
இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், ஒரு மாதம் கால அவகாசம் வழங்கினார். மேலும், கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவிலை அகற்றுவது குறித்த முழுவிபரங்களை அளிக்குமாறு, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து அறநிலைத் துறையினருக்கு நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். மேலும், பொது இடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டிருந்தாலும், உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.