கோவையில் விவசாயிகளைக் குறிவைத்து மோசடி செய்யும் நபரை கைது செய்யக் கோரி மனு

கோவை : 5 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளைக் குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.


கோவை : 5 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளைக் குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். 



நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரும் இவரது குடும்பத்தினரும் இணைந்து கடந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாயிகளைக் குறிவைத்து கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளனர். அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் முக்கிய நபர்களை விஜயகுமார் சந்தித்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களிடம் உள்ள விவசாயப் பொருட்களான மஞ்சள், சோளம் போன்ற பயிர் பொருட்களை வாங்கிக்கொண்டு பணமாக தருவதாக மோசடி செய்துள்ளார். 

இதில், சத்தியமங்கலம் கடம்பூரைச் சேர்ந்த சதாசிவம் என்பவரை ஏமாற்றி, பல்வேறு விவசாயிகளை ஒருங்கிணைத்து ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மக்காச்சோளங்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். 

அதேபோல, கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார். இவரிடம் தேங்காய் கொப்பரை, மக்காச்சோளம், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்யலாம் எனக்கூறி, விஜயக்குமார் கடந்த 2013-ம் ஆண்டு ரூ. 1.70 கோடி வரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இப்படி கோவை, ஈரோடு, தூத்துக்குடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளிடம் இருந்து பொருட்களைப் பெற்றுக் கொண்டு பணம் தரவில்லை.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விஜயக்குமார் மீது முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்துள்ளனர். 

அதேபோல, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பாலசுப்பிரமணியம் என்பவருக்காக நளினி என்பவர் தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் ஆவணச் சட்டம் பிரிவு 138-இன்படி மோசடி மன்னன் விஜயகுமாரை குற்றவாளி என தீர்மானித்து, ஒரு வருடம் சிறை தண்டனையும், நஷ்ட ஈடாக ரூ. 4 லட்சமும் செலுத்தக் கோரி தீர்ப்பளித்தது. இருப்பினும், ஒரு ஆண்டுகளாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

ஆகவே, காவல்துறையினர் குற்றவாளிகளை விரைந்து பிடித்து, எங்களின் பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...