நீலகிரி : குன்னூரில் வருவாய் துறையின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற நிலையில், இதில், பொதுமக்களையும் இணைத்திருந்தால் பேரணியின் நோக்கம் முழுமை அடைந்திருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விரைவில் வரவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னூரில் வருவாய் துறையின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கிய இந்தப் பேரணி பெட்போர்டு, லாலி மருத்துவமனை, வழியாக குன்னூர் தீயணைப்பு நிலையம் வந்தடைந்தது. இதில், வருவாய் துறையினர், கல்லூரி மாணவிகள், ஐ.டி.ஐ. மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
"18 வயதினை நிரம்பாத மாணவ, மாணவிகளைக் கொண்டு கண்துடைப்பிற்காகவே இதுபோன்ற விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினரைக் கொண்டு நடத்தும்போது, விழிப்புணர்வு ஊர்வலத்தின் நோக்கம் முழுமை அடையும்," என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.