சென்னை : வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு 17 பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிட்டது.

தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கை மற்றும் சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 3-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், 80 சதவீதம் அரசு பள்ளிகள் மூடப்பட்டன. விழுப்புரம், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதனிடையே, அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது. 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு 17-பி பிரிவின் கீழ் பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. ரூ. 7,000 தொகுப்பு ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.