கோவை : கோவையைச் சேர்ந்த நாடகம் மற்றும் திரையுலக கலைஞர்களின் நடிப்புத் திறமையை மேம்படுத்தும் விதமாக நடைபெற்ற 2 நாள் பயிற்சி பட்டறையில், வயது வித்தியாசமின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஹோப்ஸ் பகுதியில் உள்ள க்ளஸ்டர்ஸ் மீடியா ஜோனில், உடல்வெளி கலை அறக்கட்டளையின் சார்பில் இந்தப் பயிற்சி பட்டறை நடைபெற்றது. 19 மற்றும் 20-ம் தேதிகளில் பெங்களூருவைச் சேர்ந்த கலைஞர் சித்தார்த் சுந்தர், பயிற்சி பெறுபவர்களுக்கு நாடகக் கலை குறித்து பயிற்சி அளித்தார்.

"இந்தப் பயிற்சிபட்டறையின் முக்கிய நோக்கம், கோவையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு, நாடகக் கலை மற்றும் மேடை நாகரீகம் குறித்து பயிற்சி அளிப்பதே ஆகும். இதுவரை 7 முறை பயிற்சி பட்டறைகள் அமைத்து பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது," என்றார் பயிற்றுநர் சித்தார்த் சுந்தர்.

நகர்ப்புற வறுமை, பாலின அடையாளம், மோசடி, தனிமை, தாய், திருமணம், கொலை மற்றும் பிற அன்றாட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சிப் பட்டறை குறித்து நடிகரும், உடல்வெளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தரணிதரன் பேசுகையில், "இந்தப் பயிற்சி பட்டறையின் மூலம் பழைய கலாச்சாரங்களை திரையரங்குகளில் மீண்டும் பொதுமக்களிடம் காண்பித்து, சமுதாயத்தில் கலைஞர்களுக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை உருவாக்க முடியும். பெயிண்டர், சிற்பி மற்றும் பாடகர் என எந்தப் பணிகளை செய்து கொண்டிருந்தாலும், அவர்களும் கலைஞர்களாகலாம். காரணம், இந்தத் துறை அனைவருக்கும் பொதுவானதே ஆகும்," என்றார்.

இந்த ஆண்டு இறுதி வரையில் உள்ள ஒவ்வொரு வார கடைசி நாட்களில் நாடகம் அரங்கேற்ற திட்டமிட்டிருப்பதாகவும் தரணிதரன் கூறினார்.
"பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். எந்தவிதமான எண்ணங்கள் இன்றி வருபவர்கள், இங்கு குறிப்பிட்ட நிலையை எட்டுகின்றனர்," என்கிறார் இங்கு பயிற்சி பெற்ற மாணவி அர்ச்சனா.