திருப்பூர் : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதைப் போன்று, பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையின் போது, பல்வேறு அரசு திட்டங்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாகப் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பா.ஜ.க., பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:- பிப்ரவரி 10-ம் தேதி பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திருப்பூர் வர இருக்கிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 2 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். இடம் தேர்வு செய்யும் வேலை நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படும், என்றார்.

பின்னர், கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை கட்சியின் தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும். கூட்டணி தொடர்பான எந்தத் தகவலையும் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள முடியாது. கூட்டணி பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நிலைப்பாடு, இரட்டை நிலைப்பாடு என மக்கள் உணர்ந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். மோடி ஒழிக என்று கூறுவதை விட, அவர்களுடைய திட்டங்களை சொல்லி வெற்றி பெறலாம்.
தேர்தலில் அரசியல் மாற்றம் என்பது தமிழகத்திலும் இருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். மதுரைக்கு எய்ம்ஸ் போன்று, அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான அறிவிப்பு, பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையின் போது இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்," எனக் கூறினார்.