ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி : மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ABCD சொல்லி கொடுத்த கோவை எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன்

கோவை : ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக, கோவையில் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியில் எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் மாணவர்களுக்கு பாடம் நடத்திய நிகழ்வு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது.


கோவை : ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக, கோவையில் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியில் எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் மாணவர்களுக்கு பாடம் நடத்திய நிகழ்வு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது. 



9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ - ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஆசிரியர்கள் பணிக்கு வராததால், மாவட்டத்தில் பல பள்ளிகள் பூட்டியே கிடக்கின்றன. திறக்கப்பட்ட பல பள்ளிகளிலும் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனிடையே, கோவை கெம்பட்டி காலனி பகுதியில் மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் வந்திருந்த போதும், ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. 



இதனை அறிந்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். புதிதாக தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு உயிரெழுத்துக்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்களை சொல்லி கொடுத்தார். மேலும், மாணவர்களை எழுதிக் காட்ட சொல்லியும், வாசிக்க சொல்லவும் வைத்தார். இந்தக் காட்சிகள் வெளியாகிய நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...