திருப்பூர் : அவிநாசி துணை மின்நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்த விபத்தால், 13 கிராமங்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் துணை மின்நிலையத்தில் ஆயில் கசிவின் காரணமாக ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. இதில், அருகில் இருந்த மற்றொரு டிரான்ஸ்பார்மரும் சேர்ந்து எரிந்தது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவிநாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான 2 டிரான்ஸ்பார்மர்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதன் காரணமாக, அவிநாசி, ஆட்டையம்பாளையம், தேவம்பாளையம், சூளை, சாளைபாளையம், ராக்கியாபாளையம் உள்ளிட்ட 13 கிராமங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இன்று மாலைக்குள் மாற்று துணை மின்நிலையம் மூலமாக 13 கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தனர். முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.