கேபிள் டிவி புதிய கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கேபிள் ஆபரேட்டர்கள் ஒருநாள் ஒளிபரப்பு நிறுத்தம்

கோவை : அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கேபிள் டிவி புதிய கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கேபிள் ஆப்பரேட்டர்கள் ஒரு நாள் ஒளிபரப்பு நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை : அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கேபிள் டிவி புதிய கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கேபிள் ஆப்பரேட்டர்கள் ஒரு நாள் ஒளிபரப்பு நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடிப்படை கட்டணம் ரூ. 155 எனவும், கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் ரூ. 500 வரை வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், தாங்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட இந்தியா முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கேபிள் ஒளிபரப்பை நிறுத்தி உள்ளனர். 



இது குறித்து கோவை கேபிள் ஆபரேட்டர்கள் கூறியதாவது :- உடனடியாக புதிய கட்டண முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். கேபிள் டிவிக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் சுமார் 7.5 லட்சம் கேபிள் கனெக்‌ஷன் உள்ள நிலையில், அரசு கேபிள் கனெக்‌ஷன் 3 லட்சம் பேரும், எஸ்.சி.வி., டி.சி.சில்., வி.கே. டிஜிட்டல் என பல்வேறு இணைப்புகள் பெற்று உள்ளனர். 

ரூ.150-க்கு எல்லா சேனல்கள் பொதுமக்கள் தாங்களே விரும்பிய சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம் என டிராய் அறிவிப்பின் மூலம் அனைத்து சேனல்கள் பெற ரூ. 700 வரை ஆகும். இதனை வாடிக்கையாளரிடம் பெற முடியாத சூழல் ஏற்படும் என்பதால் பழைய முறையையே பின்பற்ற வேண்டும். இதனை வலியுறுத்தியே அகில இந்திய அளவில் ஒலிபரப்பை நிறுத்தி உள்ளனர். டிராய் தங்களை அழைத்து பேசி இதனை நடைமுறைப்படுத்த 6 மாத காலஅவகாசம் வழங்கி கேபிள் ஆபரேட்டர்களை அழைத்து பேசி, பின்னர் இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை, என்றனர்.

காலை முதல் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால் தொலைக்காட்சி தொடர் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...