உத்தரபிரதேச கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்திக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உத்திரபிரதேச மாநில (கிழக்கு) பொதுச்செயலாளராக பிரியங்காவை நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நியமித்தார். இந்தப் பணியை பிரியங்கா வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து மேற்கொள்ளப் போகிறார். புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு, அகில இந்திய தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "துடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். தனது புதிய பொறுப்பில் அவர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்," இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதேபோல, "உத்திரபிரதேச மாநில (கிழக்கு) பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவுக்கு தனது வாழ்த்துக்கள்," என தி.மு.க. எம்.பி. கனிமொழியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.