நீலகிரி : கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சயானை, வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதகை கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் சயான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஏற்கனவே வரும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால், இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி உதகை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சயான் தரப்பினர் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்யுமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, சயான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில், கூடுதல் அவகாசம் கேட்டு உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை, வரும் ஜன.,29-ல் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.