கோவை : பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தில் ஈடுபட்டதால், கோவையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கோவை : பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தில் ஈடுபட்டதால், கோவையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

புதிய ஓய்வூதிய திட்டமான சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பள்ளி கல்வி துறையையும் தொடக்கக் கல்வி துறையும் இணைக்கக் கூடாது மற்றும் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி விடுதலையான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 3வது நாளாக இன்றும் கோவை மாவட்ட தலைநகரங்களில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டம் காரணமாக ஏராளமான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.