கோடநாடு விவகாரம் : முதலமைச்சர் பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேலுக்கு தடை

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு பேச சாமுவேல் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


கோடநாடு கொள்ளை மற்றும் கொலை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு பேச சாமுவேல் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிப்பதாக கூறி பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூ மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. மேலும், தன்மீது அவதூறான குற்றசாட்டுகளை பரப்பி வரும் சாமுவேல் மேத்யூவிடம் மானநஷ்ட இழப்பீடாக 1.10 கோடி ரூபாய் கேட்டும் முதலமைச்சர் தரப்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை, அதை தொடர்ந்த கொலைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு பேச சாமுவேல் மேத்யூ, சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு தடை விதித்துள்ளது. மேலும், உரிய ஆதாரங்கள் இல்லாத ஆவணங்களை அவர்கள் வெளியிடவும் தடை விதித்த நீதிமன்றம், இவ்வழக்கின் மறு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...