சிங்காநல்லூர் குளப்பகுதியில் நகர்ப்புற வனத் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் இந்தியாவின் வனமகன்

கோவை : நகர்ப்புற வனத்தை உருவாக்கும் திட்டத்தை கோவை மாநகரில் உள்ள சிங்காநல்லூர் குளப்பகுதியில் இந்தியாவின் வனமகன் பத்மஸ்ரீ ஜாதேவ் பயேங் நாளை தொடங்கி வைக்கிறார்.

கோவை : நகர்ப்புற வனத்தை உருவாக்கும் திட்டத்தை கோவை மாநகரில் உள்ள சிங்காநல்லூர் குளப்பகுதியில் இந்தியாவின் வனமகன் பத்மஸ்ரீ ஜாதேவ் பயேங் நாளை தொடங்கி வைக்கிறார். 

தொழில்நகரமான கோவையைச் சுற்றிலும் பெரும்பாலும் வனங்களே நிறைந்துள்ளன. இந்த நிலையில், நகர்ப்புறங்களிலும் வனப்பகுதியை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக, அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திர நதிக்கரையில் உள்ள மணல் படுகையிலும், மரங்களை நடவு செய்து மாபெரும் வனப்பகுதியை உருவாக்கிய இந்தியாவின் வனமகன் ஜாதேவ் பயேங் கோவை வருகிறார். 



முதற்கட்டமாக, சிங்காநல்லூர் குளத்தின் பகுதியில் மியாவாக்கி முறையில் உருவாக்கப்பட இருக்கும் நகர்ப்புற திட்டத்தை அவர் நாளை தொடங்கி வைக்கிறார். இவர் தொடங்கி வைக்கப்படும் இந்த நகர்ப்புற வன திட்டத்திற்கு 'ஜாதவ ஆரண்யா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தில் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தின் உறுப்பினர்கள், கோவை மாநகராட்சி நிர்வாகம், இந்திய ஆயில் நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயல்படுகின்றனர். 

36 ஆண்டுகளாக அஸ்ஸாம் மாநிலத்தில் மணல் படுகைகள் உள்பட 1,360 ஏக்கர் நிலங்களை பசுமை காடுகளாக மாற்றிய, இந்தியாவின் வனமகன் ஜாதேவ் பயேங்கிற்கு, மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...