நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்று லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தட்சணாமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த பெனடிக்ட் மற்றும் பால் ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, கணக்கில் வராத ரூ. 19, 570 கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.