கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து ஆவணப்படம் படத்தின் மூலம் தன் மீது அவதூறு பரப்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜன.12: கொடநாடு சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத என் மீது பொய் பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருப்பதாகவும், விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொள்ளை முயற்சி மற்றும் படுகொலை குறித்து டெல்லியில் தெகல்ஹா இணைய பத்திரிகை முன்னாள் ஆசிரியர் கடந்த வாரம் ஒரு வீடியோவை வெளியிட்டு பேட்டி அளித்தார். அதில் இச்சம்பவத்துடன் முதலமைச்சரை தொடர்புப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார். மேலும், கோடநாடு எஸ்டேட் இல்லத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மறைந்த ஜெயலலிதாவையும், என்னையும் களங்கப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் கூறப்பட்டுள்ள தகவல் எதுவும் உண்மையல்ல எனக் கூறினார். அதோடு, டெல்லியில் ஒரு வீடியோவை வெளியிட்டு களங்கம் கற்பிக்க முயற்சி செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து ஆவணப்படம் படத்தின் மூலம் தன் மீது அவதூறு பரப்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.