நீலகிரியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 3,00 தற்காலிக தீ தடுப்பு காவலர்கள் நியமனம்

நீலகிரி : வறட்சியின் போது நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வனஅலுவலர் சுமேஷ் சோமன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : வறட்சியின் போது நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வனஅலுவலர் சுமேஷ் சோமன் தெரிவித்துள்ளார். 



இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது :- நீலகிரி மாவட்டத்தில் உதகை, பார்சன்ஸ்வேலி, குன்னூர், கோத்தகிரி, கோரகுந்தா உள்ளிட்ட 13 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வன சரகங்களில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.

இதுதவிர, பல்வேறு வகையான அரிய வகை மரங்களும், தாவரங்களும் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உறைபனி பொழிவு அதிகம் காணப்படுவதால், வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள், புல்வெளிகள், மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன. இதனால் காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.



நீலகிரி வனக்கோட்டத்தில் காட்டுத் தீ ஏற்படாத வண்ணம் கண்காணிக்கும் வகையில், தற்காலிகமாக 300 தீ தடுப்பு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், கொலேரிபெட்டா மலையில் வனத்துறை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2 வன ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, வயர்லெஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பார்வையிட்டால் பைக்காரா, நடுவட்டம், குந்தா, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட முடியும்.

இதன்மூலம், வனப்பகுதிகளில் புகை, காட்டு தீ போன்றவை இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிப்பார்கள். இதற்காக மாவட்ட வன அலுவலகத்தில் 24 மணி நேரமும் வயர்லெஸ் ஆபரெட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் வனச்சரகர்களுக்கு தகவல்களைத் தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தீயணைப்புத்துறையின் உதவியும் கோரப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...