கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் மற்றும் பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மாநில அளவில் அங்கீகாரம்

கோவை : தென்னை விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, நபார்டு வங்கி கருத்தரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரிசுகளை வழங்கிக் கவுரவித்தார்.


கோவை : தென்னை விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, நபார்டு வங்கி கருத்தரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரிசுகளை வழங்கிக் கவுரவித்தார்.



தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில், நீரா பானம் மற்றும் தரமான வேப்பம்புண்ணாக்கு தயாரிப்பிற்காக, கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு முதல் பரிசும், தரமான தென்னை சார்ந்த பொருட்கள் தயாரிப்பிற்காக பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது. இவர்களுக்கான பரிசுகளையும், பாராட்டுக் கேடயங்களையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளிடம் வழங்கினார்.



கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தரமான தென்னை பொருட்களை தயாரிக்கவும் இந்நிறுவனங்கள் உதவிகளைச் செய்து வருகின்றன.



மேலும், தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானிய திட்டங்கள் சலுகைகளை நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்குக் கிடைக்க வழிவகை செய்து வருகின்றன. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு (NABARD) வங்கி நிதி உதவி வழங்கியும், வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனம் ஆலோசனை மற்றும் பயிற்சிகளையும் வழங்கி இந்நிறுவனங்களை ஊக்குவித்து வருகின்றன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...