கோவையில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கோவை: கோவை சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட காந்திமா நகர் பகுதியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட காந்திமா நகர் பகுதியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் தேவானந்தன் (51). இவர் பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறார். இவரது மகனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. இதனால் தேவானந்தன் தனது மகனுக்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்க பொங்கலன்று குடும்பத்துடன் கேரளாவுக்குச் சென்றார். 

பின்னர் சிகிச்சை முடிந்து இன்று காலை தனது வீட்டுக்கு வந்த தேவானந்தன் வீட்டின் முன் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு புகார் அளித்தார். 

தகவலறிந்து வந்த காவல்துறையினர், தடயவியல் துறையினருடன் சேர்ந்து சோதனை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  சிசிடிவி காட்சிகளை கொண்டு போலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...