கோவையில் மாநகராட்சி பள்ளியின் ஹாக்கி புல்தரைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கோவை : ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியின் ஹாக்கி மைதானத்தில் உள்ள புல்தரைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியின் ஹாக்கி மைதானத்தில் உள்ள புல்தரைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சொந்தமான ஹாக்கி புல்தரை நீண்ட நாளாக பயன்படுத்தாமல் இருந்தது. சில வருடங்களாகச் சர்ச்சைக்குள்ளாகி வரும் இந்த இடத்தில் ஹாக்கி மட்டைகள் மற்றும் பந்துகள் புரண்டு வெகுநாளாகிறது. 

இந்நிலையில், இந்த மைதானத்தில் உள்ளூர் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சிலர் தங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, எந்த பாதுகாப்பு ஊழியரும் நியமிக்கப்படாததால் சமுதாய விரோரச் செயல்கள் வெகு இயல்பாக நடந்தேறி வருகின்றன. 

இதனிடையே, இங்கு ஒரு ஹாக்கி மைதானத்தை உருவாக்கக் கடந்த 2015 -ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து கோவை மாநகராட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதன் மேற்படி வேலைகள் ஏதும் நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டாவது முறையாக இந்தப் புல்தரை மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. 



இதையடுத்து, தகவல் அறிந்து விரைந்த கோவை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...