கோவையில் கூட்டுறவுச்சங்க பொறுப்பாளரை ஆபாசமாகப் படமெடுத்து பணம் பறித்த கும்பலில் 3 பேர் கைது

கோவை : வேலாண்டிபாளையம் கூட்டுறவுச்சங்க பொறுப்பாளரை கடத்தி ஆபாசமாகப் படம் எடுத்து பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை சாயிபாபாகாலனி போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : வேலாண்டிபாளையம் கூட்டுறவுச்சங்க பொறுப்பாளரை கடத்தி ஆபாசமாகப் படம் எடுத்து பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை சாயிபாபாகாலனி போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, சாயிபாபா காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (51). இவர் வேலாண்டி பாளையம் நகர கூட்டுறவு சங்க செயலாளராக இருந்து வருகிறார். இவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றுள்ளனர். பின் அவரை நிர்வாணமாக்கி, பெண்ணுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இதில் அவரிடம் முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை பறித்துள்ளனர். 



இந்நிலையில், இது தொடர்பாக வெளியே சொல்ல அஞ்சிய சரவணக்குமாரை கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி ரூ.50 லட்சம் வரை பறித்துள்ளார். இந்நிலையில், கடந்த 18 -ம் தேதி மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், மன உளைச்சலுக்கு ஆளான சரவணக்குமார் சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இதையடுத்து, கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் சக ஊழியர்  நாகராஜ் (43), என்பவரின் உதவியுடன் பைனான்சியர் பத்மநாபன் (42), மற்றும் ஜி.என் மில் பகுதியை சேர்ந்த விஷ்ணு குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சரவணக்குமாரை கடத்தியதும் தொடர்ந்து பணம் பறிப்பில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையடுத்து, பணப்பறிப்பு கும்பலைச் சேர்ந்த நாகராஜ், பத்மநாபன், விஷ்ணுகுமார் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கார்த்திகேயன் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...