மேட்டுப்பாளையம் குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா

கோவை : மேட்டுப்பாளையம் அருகே குருந்த மலையில் நடைபெற்ற தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே குருந்த மலையில் நடைபெற்ற தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள குருந்த மலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் 19 -ம் தேதி வள்ளிமலையில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 10 மணிக்கு யானை வாகன் உற்சவமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் குழந்தை வேலாயுத சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். மேலும், மாலை 4 திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து, திருத்தேருக்குக் கோவில் தலைமை அர்ச்சகர் ஜெயபால சுப்பிரமணியம் சிறப்பு பூஜைகள் நடத்தி வைத்தார். இதையடுத்து, ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ, கோயில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். குருந்த மலையைச் சுற்றி நான்கு ரத வீதிகளில் திருத்தேர் வலம் வந்ததது. மேலும், தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...