கோவையில் சாதி வெறியோடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கோவை : கோவையில், இளைஞர்களைத் தாக்கியதோடு சாதியைக் குறிப்பிட்டு இழிவுப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செஞ்சிலுவை சங்கம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : கோவையில், இளைஞர்களைத் தாக்கியதோடு சாதியைக் குறிப்பிட்டு இழிவுப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செஞ்சிலுவை சங்கம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (20). இவர் சென்ற வாரம், கீரனத்தம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட தனது உறவினர்களை காணச் சென்றுள்ளார். அப்போது அருகிலிருந்த பேக்கரி உரிமையாளரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. 



அந்த சமயத்தில், பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்களை பேக்கரி உரிமையாளர் கடுமையாக தாக்கியதாகவும், சாதிப்பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே, தாக்கப்பட்ட இளைஞர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதையடுத்து, இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பேக்கரி உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரியும், சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பான குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நேருதாஸ், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த நவீன், திராவிடர் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்மணி மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...