கோவையில் தலைக்கவசம் அணியாமல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்திய அ.தி.மு.க கட்சிக்காரர்கள்

கோவை : எம்.ஜி.ஆரின் 102 -வது பிறந்தநாளை முன்னிட்டு, சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றதை கண்டு பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவை : எம்.ஜி.ஆரின் 102 -வது பிறந்தநாளை முன்னிட்டு, சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றதை கண்டு பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். 

எம்.ஜி.ஆரின் 102 -வது பிறந்த நாளை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி ஆறுகுட்டி, எம்.ஜி.ஆர். இளைஞரணியின் செயலர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தச் சென்ற கட்சிக்காரர்கள், சாலை விதிகளை மீறி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றது தவறான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது. 



இது பற்றி பேரணியை கண்ணால் கண்ட ஒருவர் கூறும் போது, அரசியல்வாதிகளும், தொண்டர்களும் இது போன்ற விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளும் போது சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும். பிறர் பின்பற்றும் அளவிற்கு அதனை நடத்த வேண்டும். ஆனால், இந்த பேரணியில் ஒருவர் கூட சாலைவிதிகளை மதிக்கவில்லை. தலைக்கவசம் இல்லாத இந்த போக்கு மற்றவர்களுக்குத் தவறான உதாரணமாக இருக்கும், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...