கோவை : கோவையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் பயனடைந்த தாய் ஒருவர் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாட்டினை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். தாய்மார்களின் திறமைகளை மேம்படுத்துதல் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தப் பிற துறைகளுடன் இணைந்து பணிபுரிதல் ஆகியவை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் நோக்கமாகும்.
கோவை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சியில் 756 அங்ன்வாடி மையங்களும், பேரூராட்சியில் 321 அங்கன்வாடி மையங்களும், நகராட்சியில் 103 அங்கன்வாடி மையங்களும், மாநகராட்சியில் 517 அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 1697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 12,610 கர்ப்பிணி பெண்களும், 10,610 பாலூட்டும் தாய்மார்களும், 70,314 குழந்தைகளுக்கும் இணை உணவு பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், 33,053 குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பயன் பெற்ற அபிராமி கூறுகையில், "நான் டவுன்ஹால், தியாகி குமரன் தெரு பகுதியில் வசிக்கிறேன். எனது மகன் பெயர் மிதுனுக்கு 3 வயது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், செயல்படும் அங்கன்வாடி மையங்களில், குழந்தை வளர்ப்பு முறைகளான ஆரம்பகால குழந்தைப் பருவத்தின் முக்கியத்துவம், குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிகள் குறித்தும், வீட்டில் எவ்வாறு குழந்தைகளை பராமரித்தல் என்பது குறித்த விளக்கங்களையும், குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், புரதச் சத்து அடங்கிய உணவுகளையும் வழங்குவது குறித்து அறிந்தேன்.
இதையடுத்து, என் வீட்டின் அருகிலுள்ள செல்வபுரம் (தெற்கு) அங்கன்வாடி மையத்தில் எனது மகனைச் சேர்த்தேன். அங்கன்வாடி மையத்தில் அவனை அன்பாகவும், மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தனர். எனது குழந்தைக்கு மதிய உணவுடன் கூடிய பள்ளி முன்பருவக் கல்வி மற்றும் விளையாட்டு கல்வி கொடுத்தார்கள். இதன் மூலம் என் குழந்தை அனைவரிடத்திலும் நன்றாக பேசி, நல்ல பழக்கவழக்கங்கள் கற்றுக் கொண்டான். அன்பாக வழிநடத்தி, சத்தான உணவு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.