கோவை : கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பொதுமக்களே செல்போனில் படமெடுத்து புகார் செய்யும் செயலியை அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகளுக்கு இன்று அறிமுகப்படுத்தினர்.

கோவை மாநகரில் பெருகி வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல்களும் விதிமீறல்களும் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனைக் குறைக்க கடந்த மாதம் புதிய செயலியை கோவை மாநகர போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்தனர். அதற்கு, காவல் மின்னணு கண் (போலீஸ் இ -ஐ) என்று பெயர்.
இந்த செயலி மூலம் போக்குவரத்து விதிமுறை மீறில்களை காவல்துறைக்கு பொது மக்களே தெரிவிக்க முடியும். தலைக் கவசமின்றி வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தல், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துதல் போன்ற பல விதிமுறை மீறல்களை இந்த செயலி மூலம் புகைப்படம் எடுத்து பொதுமக்களே காவல் துறைக்கு அனுப்ப முடியும். அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் இந்த செயலி மூலம் பதிவாகும். இதன் மூலம் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

இதையடுத்து, கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அந்த செயலியை, அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகளுக்கு இன்று அறிமுகப்படுத்தினர். இந்த செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500 -க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும், கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் சுஜித் குமார் ஐ.பி.எஸ், உதவி ஆணையாளர்கள் ராஜ் கண்ணா, கொடி செல்வம் ஆய்வாளர்கள் சதாசிவம், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், நிகழ்ச்சியில், காவல் துறையினர் கூறியதாவது :- இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் தொடங்கி இன்று வரை 3500 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதேபோல, இந்த செயலி மூலம் பொதுமக்கள் உதவியுடன் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறிய நபர்களிடம் இருந்து ரூ.3 அரை லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றும் மட்டும் 500 மாணவிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த மாதம் முடிவதற்குள் 25 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்ய முயற்சிகள் செய்து வருவதாக மாணவிகள் மத்தியில் தெரிவித்தனர்.