வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க சலுகை : விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன., 24

கோவை: வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்காகத் தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகை ஜனவரி 24-ம் தேதி நிறைவடைகிறது.

கோவை: வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்காகத் தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகை ஜனவரி 24-ம் தேதி நிறைவடைகிறது. 

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிப்பதற்கான அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க முயற்சி செய்பவர்களுக்காக கடந்த அக்டோபர் மாதம் 25 -ம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது பற்றி எழுதப்பட்டிருந்தது. 

அந்த ஆணையின்படி, 2016 -ம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி முதல் அதே வருடம் டிசம்பர் மாதம் 31 -ம் தேதி வரையில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் தங்களது பதிவினை புதுப்பிக்க சலுகை வழங்கப்படுகிறது. 

மேலும், புதுப்பிக்கத் தவறியவர்கள் ஜனவரி 24-ம் தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ, வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ புதுப்பித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...