கோவை : கோவையில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வரும் பிப்ரவரி மாதம் 10 -ம் தேதி, 500 -க்கும் மேற்பட்ட காளைகளுடன், 350 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையின் போது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. அதை போலவே, கோவையில், சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு, 'ஓம் கார் ஃபவுண்டேஷன்' சார்பில் சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்தும் வந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்று, பரிசுகளை வென்றனர்.
பெரும்பாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை, சென்ற ஆண்டு கோவை மக்கள் குதூகலத்துடன் நேரில் கண்டுகளித்தனர். இந்நிலையில், பிப்ரவரி மாதம் 10 -ம் தேதி, 500 -க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும், 350 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, வெகுவிமரிசயாக நடத்தப்படவுள்ளதாகக் கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தின் செயலாளர் கூறுகையில், "நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கோவையைச் சேர்ந்த பல்வேறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கோவை ஜல்லிக்கட்டு சங்கம், கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை, எல் & டி பைபாஸில் உள்ள செட்டிப்பாளையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்ற வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் கோவை மக்கள் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர். சிறப்பான முறையில் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது," என்றார்.