திருப்பூர்: திருப்பூரில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், தன்னை ஒதுக்கி வைக்கும் கணவரோடு சேர்த்தி வைக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பால்வினை நோய் தடுப்புப்பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வரும் அழகுராஜா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அழகுராஜாவுக்கும், அவருடன் பணிபுரிந்து வரும் கோமதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதால், திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, இருவரும் திருமணம் செய்துகொண்டு தன்னையும், குழந்தைகளையும் கவனிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டு அப்பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக சாதி வேதனை தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் தன்னை, தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வாழ்வாதரம் ஏற்பாடு செய்துதர வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, காவல்துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து, அவர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துவிட்டுச் சென்றார்.