திருப்பூர் : குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உடன் பிறந்த தம்பியை கொலை செய்த அண்ணனைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் செல்லம் நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கு பிரகாஷ் மற்றும் விக்னேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இருவரும் முருகம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மது அருந்தச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, மது அருந்திக் கொண்டிருக்கும் போதே இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறியதில் பிரகாஷ் தான் வைத்திருந்த பாட்டிலை உடைத்து சகோதரர் விக்னேஷின் கழுத்தில் குத்தியிருக்கிறார். இதில், விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். விக்னேஷ் பலியானதையடுத்து பிரகாஷ் தலைமறைவானார்.
இந்நிலையில், வீரபாண்டி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, தலைமறைவாகியிருந்த பிரகாஷை கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.