விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

கோவை : விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

கோவை : விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.



விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்யக்கோரியும், நாடாளுமன்றத்தில் விவசாயத்திற்கென தனி பட்ஜெட்டை மத்திய அரசு நிறைவேற்றக்கோரியும் தமிழக விவசாயிகள் சங்கத்தின், கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையிலான விவசாயிகள் குழு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிக பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நீர் தட்டுப்பாடு, தட்பவெப்ப நிலை போன்ற பல்வேறு சவால்களை சந்திக்கும் விவசாயிகள், வாங்கிய வங்கி கடன்களையும், திரும்ப செலுத்த முடியாமல் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே, விவசாயத்தை ஊக்குவிக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் பாரபட்சம் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். 



மேலும், பிப்ரவரி மாதத்தில் கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாயத்திற்காக தனி பட்ஜெட் தீர்மானிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...