பயன்படுத்திய ஆவின் பால் பாக்கெட்டுகளை இனி குப்பையில் போட வேண்டாம்..! மறுசுழற்சி செய்ய ஆவின் திட்டம்

கோவை : ஆவின் பூத்களில் பயன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுக்களை திரும்பப் பெற ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


கோவை : ஆவின் பூத்களில் பயன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுக்களை திரும்பப் பெற ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்ததைப் போல, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. பால் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆவின் நிறுவனம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முழுவீச்சில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 



ஆவின் நிறுவனம் தினமும் 40 லட்சம் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தி வருகிறது. 

எனினும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பூத்களில் இருந்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிளாஸ்கள் மற்றும் பீங்கான் கப்புகளை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 



இதன் ஒரு பங்காக, தங்கள் நிறுவனத்தின் உபயோகப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுக்களை திரும்பப் பெற ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய ஆவின் பால் பாக்கெட்டுகளை குப்பைத் தொட்டிகளில் வீசுவதை தடுக்கும் விதமாக, அனைத்து பூத்களிலும், பால் பாக்கெட்டுக்களை விநியோகிக்கும் நபர்களைக் கொண்டே அதனை திரும்பப் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. 

இது குறித்து ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி. காமராஜ் கூறுகையில், "ஏற்கனவே, பால் நிலையத்தில் இருக்கும் பிளாஸ்டிக் ஃபில்ம்களை எம்.எஸ்.டி.சி.யின் மூலம் ஏலத்தில் விற்கப்படுவது போல, பால் பாக்கெட்டுகளும் இந்த சேவையின் மூலம் திரும்பப் பெறலாம்," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...