உதகை கோடப்மந்து கால்வாயை ஆக்கிரமித்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் : நோய் தொற்று ஏற்படும் அபாயம்

நீலகிரி : உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ளதாலும், ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீராலும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ளதாலும், ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீராலும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் தொட்டபெட்டா செல்லும் மேல்கோடப்மந்து பகுதியில் இருந்து உதகை நகரின் மையப்பகுதி வழியாக உதகை படகு இல்ல ஏரியில் கலக்கிறது கோடப்மந்து கால்வாயின் கழிவு நீர். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடும் இந்தக் கால்வாய் ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்தும், சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் தினந்தோறும் வீசும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மற்றும் தனியார் விடுதிகள், காட்டேஜ்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், இந்தக் கால்வாயில்தான் கலந்து வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசின் சார்பில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கோடப்மந்து கால்வாய் தூர்வாரப்பட்டது.



இந்த நிலையில், அவ்வப்போது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, கோடப்மந்து கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த பல மாதங்களாக வெறும் கண் துடைப்பிற்காக இந்தக் கால்வாயை தூர்வாரப்படுவது போல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

ஆனால், இந்தக் கால்வாயின் பெரும் பகுதிகளில் தூர்வாரப்படாததால் கால்வாய் முழுவதும் மண் சகதிகள் நிரம்பியும், பிளாஸ்டிக கழிவுகள் மலைபோல குவிந்துள்ளது. அவ்வப்போது, மழை பெய்து வருவதால், மழை நீர் செல்ல முறையான வழி இல்லாத காரணத்தால், கால்வாயின் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், சாலைகளிலும் வெள்ள நீர் சூழும் நிலை மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வரும் கோடை சீசனுக்குள் போர்க்கால அடிப்படையில், மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த கால்வாயை தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...