தம்பிதுரையின் கருத்து அ.தி.மு.க.வின் கருத்தல்ல : திருப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

திருப்பூர் : அ.தி.மு.க.,வின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையின் கருத்து அ.தி.மு.க.வின் கருத்தல்ல என்றும், அமைச்சர் ஜெயக்குமார்தான் தெளிவாகப் பேசி வருவதாக திருப்பூரில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் விழாவில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : அ.தி.மு.க.,வின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையின் கருத்து அ.தி.மு.க.வின் கருத்தல்ல என்றும், அமைச்சர் ஜெயக்குமார்தான் தெளிவாகப் பேசி வருவதாக திருப்பூரில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் விழாவில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 



பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளில் இருந்தவர்கள் பா.ஜ.க.,வில் இணைத்துக்கொள்ளும் விழா திருப்பூரில் நடைபெற்றது. இதில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில், அஜித் ரசிகர்கள் உள்பட பிற கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

முன்னதாக செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது :- தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடியை வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூர் அழைத்துவர அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும்பட்சத்தில், மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இன்று லயோலா கல்லூரியில் ஓவியக்கண்காட்சி என்ற பெயரில் குறிப்பிட்ட மதத்தினை மட்டும் அவமதிக்கும் வகையில், ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருப்பதற்கு மதச்சார்பின்மையை பேசுபவர்களும், நடுநிலையாளர்களும், ஸ்டாலின் உட்பட அனைவரும் பதில் சொல்லியே ஆகவேண்டும். 

சென்னையில் ராகுல் காந்தியைப் பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின், ஏன் கொல்கத்தாவில் முன் மொழியவில்லை. அதற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. அ.தி.மு.க.,வின் தம்பிதுரை பல்வேறு விவகாரங்களில் மாற்றுக்கருத்தை தெரிவித்து வந்தாலும், அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாகப் பேசிவருகிறார். தம்பிதுரையின் கருத்து அ.தி.மு.க.,வின் கருத்தல்ல. மீண்டும் மோடி பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போட்டுச்சென்ற பணிகளை, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பா.ஜ.க., சிறப்புற செய்து வருகிறது. 

மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் கேட்கும் தி.மு.க., கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சி கலைக்கக்கூடாது என்பதற்காக உதவியவர் வாஜ்பாய் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பா.ஜ.க. மட்டுமே உண்மையான மதச்சார்பின்மை கட்சி, எனக் கூறினார்.

பா.ஜ.க.வில் இணைந்தவர்களில் பெரும்பாலும் அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் மத்தியில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், "திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித்தான். அவர் தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். இனி பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்," இவ்வாறு அவர் புகழ்ந்து பேசினார். இதனால் கட்சியில் இணைந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...