தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு நாஞ்சில் நாடன் விருது வழங்கிக் கவுரவிப்பு

கோவை : கோவை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு நாஞ்சில் நாடன் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கோவை : கோவை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு நாஞ்சில் நாடன் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.



கோவையில் சிறுவாணி வாசகர் மையம் கடந்த 2017-ம் ஆண்டு உலக புத்தக தினத்தன்று (ஏப்.,23) தொடங்கப்பட்டது. இதில், ஆண்டுதோறும் படைப்பாளுமையான நாஞ்சில் நாடன் அவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதானது, சமூகம், கலை, எழுத்து, இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் இயங்கும் சிறந்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஓவியர் ஜீவாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது. 



இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விருதை, தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை டி.பாலசுந்தரம் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாஞ்சில் நாடன் கூறியதாவது :- எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகளும், விருதுகளும் பெருமைக்குரியது. தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு என் பெயரில் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆய்வுகளை நோக்கிய எழுத்தாளர்களுக்கு, வாசகர் வட்டங்கள் அங்கீகாரங்கள் அளிப்பது எழுத்தாளர்களை ஊக்குவிக்கக்கூடியது, என தெரிவித்தார்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...