முதன் முறையாக காங்கயம் காளைகளின் ரேக்ளா பந்தயம் : சொந்த மண்ணான காங்கேயத்தில் நடந்ததால் காளை வளர்ப்போர் மகிழ்ச்சி

திருப்பூர் : காங்கயம் காளைகளின் தாய் வீடான காங்கயத்தில், முதன்முறையாக இன்று 300, 200 மீட்டர் தூரங்கள் என இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.

திருப்பூர் : காங்கயம் காளைகளின் தாய் வீடான காங்கயத்தில், முதன்முறையாக இன்று 300, 200 மீட்டர் தூரங்கள் என இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. 



தமிழகம் முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரின் அறப்போராட்டத்தால் தடைகள் தகர்த்து வென்றெடுக்கப்பட்ட சல்லிக்கட்டு தடை நீக்கத்தின் பலனாய் இன்று பாரம்பரிய ரேக்ளா பந்தயங்கள் கொங்கு மண்டலத்தில் பொங்கல் திருநாளை ஒட்டிப் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது. திருப்பூரில் மாவட்டம், காங்கயத்தில் முதன் முறையாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் 450 -க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. 



ரேக்ளா பந்தயங்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் காங்கயம் காளைகளின் தாய் வீடான காங்கயத்தில் முதன்முறையாக இன்று 300, 200 மீட்டர் தூரங்கள் என இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. அதன் முறையே 200 மற்றும் 300 மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்று எல்லைக் கோட்டை தொட்டன. காங்கயத்தில் நடைபெற்ற இந்த ரேக்ளா போட்டியில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம், அறவக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 450 ஜோடி காளைகள் பங்குபெற்றன. 



உடல் வலிமைக்கும் வண்டிபாரம் இழுப்பதற்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள் பந்தய தூரத்தை மின்னலெனக் கடந்து சென்றது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. காங்கயம் ரேக்ளா குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகளை திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர். இதுபோன்ற போட்டிகளால், மேற்கு மண்டலத்தில் பாரம்பரிய கால்நடைகள் வளர்ப்பு பெருகும் என காளை வளர்ப்போர் நம்பிக்கை தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...