நீலகிரி : கூடலூர் அருகே சிங்கரா வன சரகத்திற்கு உட்பட்ட பகுதி ஆச்சக்கரை அருகில் 4 வயது ஆண் சிறுத்தை இறந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், சிங்காரா வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை இறந்திருப்பதாக இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இப்பகுதிக்கு விரைந்த வன ஊழியர்கள் சிறுத்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுத்தை உடல் நலக்குறைவால் இறந்ததா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உண்டா என தெரியவரும் என்று வனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.