நீலகிரியில் விதிகளை மீறி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் : பயணிகள் கடும் அதிருப்தி

நீலகிரி : நீலகிரியில் மீண்டும் விதிகளை மீறி எக்ஸ்பிரஸ்களாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரியில் மீண்டும் விதிகளை மீறி எக்ஸ்பிரஸ்களாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில், 400 -க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், மலைப்பகுதியில் கூடுதலாக, 20 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மற்ற மாவட்டங்களை விட மலை மாவட்டமான, நீலகிரியில் அரசு பேருந்து கட்டணம் அதிகமாக உள்ளது. 



தொடர்ச்சியாக, கட்டண குறைப்பு செய்தும் மக்களுக்கு எந்த பயனுமில்லை. ஊட்டி - குன்னுார் வழித்தடத்தில், சாதாரண பேருந்துகளில், குறைந்த பட்சம் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதே வழித்தடத்தில், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில், முன்பு, ரூ.13 என இருந்த கட்டணம், ரூ.22 ரூபாய் என மாறியது. தற்போது, ரூ.21 குறைக்கப்பட்டது. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை, 53 கிலோ மீட்டர் துாரத்திற்கு, ரூ.52 வசூலிக்கப்படுகிறது. 

இத்தகைய எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக, ரூ.11, ரூ.12 என மாறி, மாறி வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து காரணம் கேட்டால், 'அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தான் வசூலிக்க முடியும்' என, நடத்துநர்கள் கூறுகின்றனர். இதில், குன்னுார் - பேரக்ஸ், மவுன்ட் பிளசன்ட் போன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் பழுதடைந்த நகர பேருந்துகள் தற்போது, ஊட்டி - குன்னுாருக்கு சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.

இதனிடையே, '35 கி.மீ., துாரத்திற்கு நகர பேருந்துகள் இயக்கலாம்' என்ற விதிமுறையின் கீழ் கணக்கு காண்பிக்க போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்டத்தில், 70 சதவீத பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தாலும், தற்போதும் பெரும்பாலான பேருந்துகள் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. 

பொதுவாக, 80 கி.மீ., துாரத்திற்கு மேல் செல்லும் பஸ்களில், குறைந்தபட்சம், 25 கி.மீ., துாரத்திற்கு ஒரு 'ஸ்டேஜ்' என இருந்தால் மட்டுமே 'எக்ஸ்பிரஸ்' என இயக்க வேண்டும். ஆனால், இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை. 

இதுகுறித்து மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது :- நீலகிரியை பொறுத்தமட்டில், அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர், 'நீலகிரியில், 454 பேருந்துகளில், 170 பேருந்துகள் மட்டுமே 'எக்ஸ்பிரஸ்' பேருந்துகளாக ஓடுகின்றன' என, கூறியுள்ளார். ஆனால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள், விதிகளை மீறி, தன்னிச்சையாக ஓட்டி, மக்களை ஏமாற்றி வரும் செயல் நீடிக்கிறது. வெளிப்படைத் தன்மை இல்லாமல் மக்களைக் குழப்பி வருகின்றனர். 

எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதற்கான கட்டண விபரங்கள் உள்ளிட்டவை குறித்து வெளிப்படையாகத் தெரிவிப்பதுடன், அனைத்து பேருந்துகளிலும் கட்டண விபர பட்டியல் வைக்கப்பட வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...