நாட்டின் பொருளாதாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் கைவிட வலியுறுத்தல்

திருப்பூர் : நாட்டிற்கு விரோதமான, பொருளாதாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு நாட்டிற்குப் பலன் தரக்கூடிய கொள்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் மாநாட்டில் வலியுறுத்தினார்.

திருப்பூர் : நாட்டிற்கு விரோதமான, பொருளாதாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு நாட்டிற்குப் பலன் தரக்கூடிய கொள்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் மாநாட்டில் வலியுறுத்தினார். 

திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு திருப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் அருணாச்சலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தனர். 



இதுகுறித்து அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மத்திய அரசின் போக்கு என்பது தனித்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைப்பது என்பது தான். அதனுடைய ஒரு பகுதியாகவே பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைக்க வேண்டுமென முயற்சி மேற்கொண்டு வருகிறது. 



இது நடைபெற்றால் வருகின்ற ஏப்ரல் 1 -ம் தேதி முதல் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி காணாமல் போய்விடும். இதனால் வங்கி சேவை மிகப்பெரிய அளவில் பாதிக்க கூடும். வங்கியில் இருக்கக்கூடிய ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். ஏற்கனவே, ஸ்டேட் பாங்க் இந்தியாவோடு அதன் அசோசியேட் வங்கிகள் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக பல ஆயிரம் கிளைகள் மூடப்பட்டது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். 



இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் போதாது, பல நாட்கள் வேலை நிறுத்தம் செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்பட உள்ளது. ஆட்சியாளர்கள் நாட்டிற்கு விரோதமான, பொருளாதாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு நாட்டிற்கு பலன் தரக்கூடிய கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...