மஞ்சூர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி : மஞ்சூர் பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் அச்சமடைந்த பொதுமக்கள், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : மஞ்சூர் பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் அச்சமடைந்த பொதுமக்கள், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களைச் சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், சிறுத்தைப்புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 

இதேபோலவே, சிறுத்தைப்புலிகள் குடியிருப்புக்குள் புகுந்து ஆடு, மாடுகளைக் கடித்து கொன்று வருவது தொடர் கதையாக உள்ளது. இந்தநிலையில் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலைகண்டி, காந்திபுரம், கெரப்பாடு, முள்ளிகூர் ஆடா, லாரன்ஸ் பகுதிகளில் குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே தஞ்சம் அடைந்து உள்ளனர். 

இந்த யானைகள் அப்பகுதியில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மேரக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை நாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காட்டு யானைகளை விரட்டியடித்தனர். இதையடுத்து அந்த யானைகள் அவலாஞ்சி அணை ஓரத்தில் நேற்று முகாமிட்டன. 

மேலும், இந்த யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட வனத்துறையினர் அசம்பாவிதம் நடக்கும் முன்பு இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...