நீலகிரி : உதகை நகராட்சியில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான உதகைக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 28 லட்சம் சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுகிறது. அப்போது சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால், திரளான சுற்றுலா பயணிகள் சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க உதகைக்கு வருகிறார்கள். அவர்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் வருகை தருகிறார்கள்.
இந்நிலையில், வாகனங்களை நிறுத்த போதிய வசதி இல்லை. இதனால் கூடலூர் வழியாக உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் பிங்கர்போஸ்ட் வழியாக காந்தல் பகுதியில் உதகை நகராட்சி சார்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. அங்கு கட்டணம் செலுத்தாமல் வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உதகையில் இருந்த டாஸ்மாக் குடோனுக்கு மதுபானங்களை கொண்டு வந்த லாரிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது டாஸ்மாக் குடோன் குன்னூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், அங்கு லாரிகள் நிறுத்தப்படுவது இல்லை.
உதகை நகராட்சி வாகன நிறுத்துமிடத்தைச் சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வாகன நிறுத்துமிடத்தில் ஆட்டோமொபைல் கடை, வாகனங்களைப் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் மற்றும் தகரத்தால் ஆன ஷெட்டுகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா வாகனங்களை அங்கு நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள கடைகள், ஷெட்டுகள், ஒர்க்ஷாப்பை உடனடியாக அப்புறப்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை மீட்டுத் தரவேண்டும் என்று தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்திள்ளனர்.